Home Featured கலையுலகம் 4.95 மில்லியன் இரசிகர்களை கடந்து ‘கபாலி’ முன்னோட்டம் புதிய சாதனை!

4.95 மில்லியன் இரசிகர்களை கடந்து ‘கபாலி’ முன்னோட்டம் புதிய சாதனை!

466
0
SHARE
Ad

kabaliசென்னை – ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ முன்னோட்டம் நேற்று வெளியானது. இது சமூக வலைத்தளத்தில் மாபெரும் சாதனை செய்துள்ளது. யூடியூபில் இதுவரை 4.95 மில்லியன் இரசிகர்களை கவர்ந்து சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கபாலி’. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் முன்னோட்டம் நேற்று காலை 11 மணியளவில் வெளியானது. முன்னோட்டம் வெளியான சில நிமிடங்களிலேயே பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், ‘விருப்பங்களும்’ (லைக்குகளும்) அதிகரித்துக் கொண்டே சென்றது.

பின்னர் ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் பார்வையிட்டதாக கலைப்புலி தாணு அறிவித்திருக்கிறார். ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் கபாலி முன்னோட்டத்தை பார்த்திருப்பது இணையத்தளத்தில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் எந்தப் படத்தின் முன்னோட்டத்தையும் இவ்வளவு வேகமாக பத்து லட்சம் பேர் பார்த்ததில்லை.

#TamilSchoolmychoice

இது ஒருபக்கம் இருக்க, ‘கபாலி’ முன்னோட்டத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் புகழ்ந்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன், “தலைவர் வெறித்தனம்… ரஞ்சித் மகிழ்ச்சியின் உச்சம்” என்று கூறியுள்ளார்.

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, “இதான் ஸ்டைல் இதான் ரஜினி இதான் தலைவா….” என்று தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ், “நெருப்புடா.. நெருங்குடா… தலைவா… நன்றி ரஞ்சித்” என்று கூறியுள்ளார்.