Home Featured நாடு சுற்றுலாத்துறை தூதராக ரஜினியை நியமிக்க மலேசிய அரசு முடிவு!

சுற்றுலாத்துறை தூதராக ரஜினியை நியமிக்க மலேசிய அரசு முடிவு!

1300
0
SHARE
Ad

rajini kabaliகோலாலம்பூர் – மலாக்கா மாநில சுற்றுலாத்துறைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தூதராக நியமிக்கலாம் என மலேசிய சுற்றுலாத்துறை யோசித்து வருகின்றது.

இது குறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட் நஸ்ரி அப்துல் அசிசும், ஜசெக கோத்தா மெலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் ஹின்னும் விவாதித்தனர்.

“இதற்கு முன் மலாக்கா சுற்றுலாத்துறைத் தூதராக நியமனம் செய்யப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ஷாருக் கான், இந்திய சுற்றுலாப் பயணிகளை மலேசியாவிற்குக் கொண்டு வரத் தவறிவிட்டதால், கபாலியில் நடித்த ரஜினிகாந்தை சுற்றுலாத்துறை தூதராக நியமிப்பதில் உங்களின் கருத்து என்ன?” என்று சிம் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

மேலும், “அவர் (ரஜினிகாந்த்) மிகவும் புகழ்பெற்றவர் மற்றும் ஷாருக் கான் அவ்வளவாக செயல்படவில்லை” என்றும் சிம் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த நஸ்ரி, “சுற்றுலாத்துறை தூதராக நியமனம் செய்ய நாம் அவரைத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சுற்றுலாத்துறை தூதராக நியமித்தது மலேசிய அரசு. அதற்காக அவருக்கு ‘டத்தோ’ பட்டமும் கொடுத்தது.

கடந்த 2011-ம் ஆண்டு, ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த டான் 2 திரைப்படத்தின் சில காட்சிகள் மலாக்காவில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.