Home Featured நாடு “சுப்ரா-இராமலிங்கம் சந்திப்பு செய்தி உண்மையில்லை” – வி.எஸ்.மோகன்

“சுப்ரா-இராமலிங்கம் சந்திப்பு செய்தி உண்மையில்லை” – வி.எஸ்.மோகன்

990
0
SHARE
Ad

V.S.Mohan

கோலாலம்பூர்- ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியம், ம இ கா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கத்தை கேஎல்ஐஏ விமான நிலையத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார் என இன்றைய (21 மார்ச் 2017) தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளிவந்திருக்கும் செய்தியில் உண்மையில்லை என மஇகா தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் தெரிவித்திருக்கிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் சுப்ராவுக்கும், இராமலிங்கத்திற்கும் இடையில் அத்தகைய சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்றும் வி.எஸ்.மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தியில், டாக்டர் சுப்ராவுக்கும் – பழனிவேல் தரப்புக்கும் இடையில் கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்தில் சமரச சந்திப்பு ஒன்று நடந்ததாகவும், அந்தச் சந்திப்பில் டாக்டர் சுப்ராவும், பழனிவேல் தரப்பில் ம இ கா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கமும் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“அந்தப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்ததாகவும், வெற்றிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும்” அந்த செய்தி மேலும் தெரிவித்தது.