Home Featured நாடு புத்தகம் ஏற்பாட்டில் சிறுகதை வகுப்பு: தமிழக எழுத்தாளர் அரவிந்த் யுவராஜ் தொடக்கி வைத்தார்

புத்தகம் ஏற்பாட்டில் சிறுகதை வகுப்பு: தமிழக எழுத்தாளர் அரவிந்த் யுவராஜ் தொடக்கி வைத்தார்

960
0
SHARE
Ad

Dr2கோலாலம்பூர் – புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் (புத்தகம்) ஏற்பாடு செய்துள்ள சிறுகதை வகுப்பு வெற்றிகரமாக கடந்த வியாழக்கிழமை உப்சியில் தனது முதல் வகுப்பைத் துவங்கியது. சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழகத்தின் ஆதரவோடு நடத்தப்படும் இவ்வகுப்பைத் தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் யுவராஜ்  தொடக்கி வைத்து வழி நடத்தினார்.

Dr

(முனைவர் முனீஸ்வரன் குமார், எழுத்தாளர் அரவிந்த் யுவராஜ்)

#TamilSchoolmychoice

படைப்புத் துறையிலும் திரைத்துறையிலும் பதினைந்து ஆண்டுகளாகச் செயலாற்றி வரும் அரவிந்த் யுவராஜ், இந்தியாவில் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி, இலக்கியம், படைப்பாக்கம், உளவியல் தொடர்பான உரைகளைகளையும், ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் தொடர்ந்து வழங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்பாக்கம் தொடர்பான பயிற்சிப் பட்டறையை வழிநடத்துவதற்காக உப்சி பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு வருகை புரிந்திருந்த இவர், புத்தகத்தின் சிறப்பு அழைப்பை ஏற்று முதல் சிறுகதை வகுப்பை வழிநடத்தினார். ஊடகவியலாளராகவும் வலைத்தள எழுத்தாளராகவும் இயங்கிவரும் இவர் படைப்பாக்கத்தில் குறிப்பாக சிறுகதைகளில் தனது பதினைந்து ஆண்டு கால அனுபவங்களைப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறந்த எழுத்தாளர் ஆவதற்கு முன்பு ஒவ்வொருவரும் முதலில் சிறந்த வாசகராக இருக்க வேண்டும் என்று பல இடங்களில் அழுத்திக் குறிப்பிட்ட அவர், புதுமைப்பித்தனின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒன்றான கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதையைப் பற்றிய கலந்துரையாடலுடன் இம்முதல் வகுப்பை வழிநடத்தினார்.

Dr 1இவ்வகுப்பு மொத்தம் ஏழு வாரங்களுக்குத் தொடர்ச்சியாக இயங்கும் என்றும் இந்தப் பருவத்தில் இவ்வகுப்புக்குப் பதினேழு பேர் பங்கேற்றதாக இவ்வகுப்பு வழிநடத்துனர் முனைவர் முனீஸ்வரன் குமார் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் இவ்வகுப்புக்கான பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் பலர் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் காணும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அடுத்தத் தலைமுறையினர் சிறுகதை இலக்கியத்தை உய்த்துணரவும் அதன்வழி எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைக்கவும் இவ்வகுப்பு வித்திடும் என்ற நம்பிக்கையோடு இவ்வகுப்பு நடத்தப்படுகிறது என்று புத்தகத்தின் தோற்றுனரும் தலைவருமான முனைவர் முனீஸ்வரன் குமார் செல்லியலோடு பகிர்ந்து கொண்டார்.