Home நாடு கிள்ளான் மாவட்ட தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் 17 ஆம் ஆண்டு விழா – சிறுகதை...

கிள்ளான் மாவட்ட தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் 17 ஆம் ஆண்டு விழா – சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி!

764
0
SHARE
Ad

27044_114682951875524_3614194_nகிள்ளான், ஜூன் 27 – கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் 17 ஆம் ஆண்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, காலை 8 மணி தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.

மனிதநேய மாமணி ரத்னவள்ளி விஜயராஜ் அம்மையார் தலைமைவகிக்க, நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் இந்நிகழ்வை முன்னிட்டு, இலக்கியச் சோலை 12 ன்  கீழ் “இடுக்கண் வருங்கால் நகுக!” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

இதில் பங்கேற்பவர்கள் தங்களது சொந்த படைப்புகளை வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதிக்குள்  அனுப்ப வேண்டும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் படைப்புகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும் என்று அவ்வியக்கத்தின் செயலாளர் எஸ்.எம் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் படைப்புகள் சிறுகதையாக இருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமலும், கணிணி அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமலும் இருக்கவேண்டும், புதுக்கவிதைகளாக இருந்தால் 16 வரிகளுக்குக் குறையாமலும், 24 வரிகளுக்கு மிகாமலும் இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், வாசகர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி,

President, Persatuan Pembaca Dan Penulis Tamil Daerah Klang, No.48, Lebuh Siput, Palm Grove  41200 Klang, Selangor.

இந்நிகழ்ச்சி குறித்து மேலும் விவரங்கள் அறிய கீழ்காணும் கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்,

பாலகோபாலன் நம்பியார் (படம்) -இயக்கத் தலைவர் – 017 3356952, 019 2792719