Home Featured கலையுலகம் ஜப்பானில் ‘கபாலி’!

ஜப்பானில் ‘கபாலி’!

855
0
SHARE
Ad

kABALI1

தோக்கியோ – சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி தமிழில் சக்கைப் போடு போட்ட ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஜப்பானிலும் வெளியாகின்றது.

ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் கபாலி அந்த நாட்டிலும் வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ திரைப்படம் முதன் முதலாக ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்களும் ஜப்பானில் வெளியீடு கண்டு வெற்றி பெற்றன.

இந்நிலையில், கபாலி திரைப்படம் இன்று முதல் ஜப்பானில் வெளியீடு காண்கிறது. இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டன என்பதோடு, படத்தின் திரைக்கதையும் மலேசியாவில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருந்தது.