இதில் அதிகபட்சமாக ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா உள்ளிட்ட 45 பேர் களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தலிலும் ஆண் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது என்பதோடு பெண்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பே கட்சிகளால் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் காணும் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்களில், 3 ஆயிரத்து 472 பேர் ஆண்கள். 320 பேர் மட்டுமே பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்.
இதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 36 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். ஆற்காடு, வானூர், கூடலூர், வால்பாறை உள்ளிட்ட 9 தொகுதிகளில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 684 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 72 ஆயிரத்து 601 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.
இனிமேல்தான், தொகுதிகளைக் குறிவைத்து கட்சிகள் மற்றும் தலைவர்களின் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் என்றும், தேர்தல் பிரச்சாரங்கள் இனிமேல்தான் அனல் தெறிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.