Home Featured உலகம் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய ஒபாமா! (காணொளியுடன்)

வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய ஒபாமா! (காணொளியுடன்)

545
0
SHARE
Ad

President Obama on leaving the White House,வாஷிங்டன் – ஒபாமா அமெரிக்க அதிபராக பத்திரிக்கையாளர்களுடன் இறுதிச் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் மிகவும் நகைச்சுவையாக தகவல்களை ஒபாமா பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது, ஒபாமா கூறியதாவது; வழக்கம் போல் டொனால்டு ட்ரம்பை பற்றிய பேசிய ஒபாமா, அவருக்கு வெளிவிவகாரக் கொள்கைகள் பற்றி தெரியாது என்கிறார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மிஸ்.ஸ்வீடன், மிஸ்.அர்ஜென்டீனா என வெளிநாட்டவர்களுடன் தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.

அண்மையில் லண்டன் சென்றிருந்த போது, இளவரசர் ஜார்ஜ் அரசு விதிமுறைகளை மீறி குளியலறை ஆடையுடன் தான் என்னைச் சந்தித்தார். அது என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. லண்டன் சென்றிருந்த போது மகாராணியுடன் உணவு உண்டேன், பிரதமருடன் விளையாடினேன்.

#TamilSchoolmychoice

நான் கறுப்பினத்தவன் என்றவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என நம்புகிறேன் என்று தெரிவித்தார். கடைசியாக “ஒபாமா அவுட்” என்ற கூறியபடியே வெளியேறியவருக்கு, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.