Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா வேட்புமனுவில் திரையரங்க இடம் குறித்து குறிப்பிடப்படவில்லை – கருணாநிதி புகார்!

ஜெயலலிதா வேட்புமனுவில் திரையரங்க இடம் குறித்து குறிப்பிடப்படவில்லை – கருணாநிதி புகார்!

528
0
SHARE
Ad

karunanidhiசென்னை – முதல்வர் ஜெயலலிதாவின் வேட்புமனுவில் சென்னை சபையர் திரையரங்க இடம் குறித்து குறிப்பிடப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி நேற்று கேள்வி-பதில் வடிவில் தகவல்களை கூறியுள்ளார்;

கேள்வி: ஜெயலலிதா இந்தப் பொதுத்தேர்தலையொட்டி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவருடைய சொத்துக்கள் சில விடப்பட்டுள்ளதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: ஆமாம் வந்திருக்கிறது; குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் பழைய “சபையர்” திரையரங்கம், அதன் இடம் ஜெயலலிதா பெயரில் தான் உள்ளதாகவும், ஆனால் ஜெயலலிதாவின் வேட்புமனுவில் அந்த இடம் குறிப்பிடப்படவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

ஒருவேளை அந்த இடம் கட்சிப் பெயரில் வாங்கப்பட்டிருந்தால், சொத்து வரி கட்சியின் பெயரில் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இடத்திற்கான சொத்து வரியை ஜெயலலிதா தான் கட்டி வருகிறார். இதைப் போல வேறு சில சொத்துக்களும் ஜெயலலிதாவின் வேட்பு மனுவிலே சேர்க்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆனால் எத்தனை பெரிய முறைகேடுகளையும் மூடி மறைத்திடக் கூடிய சாதுர்யமும், சக்தியும் ஜெயலலிதாவுக்கு உண்டு என்பது தான் எல்லோருக்கும் தெரியுமே! என கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார்.