Home Featured கலையுலகம் 1 கோடி பார்வையாளர்களை கடந்து ‘கபாலி’ முன்னோட்டம் சாதனை!

1 கோடி பார்வையாளர்களை கடந்து ‘கபாலி’ முன்னோட்டம் சாதனை!

644
0
SHARE
Ad

kABALI1சென்னை – வெளியான மூன்றே நாட்களுக்குள் 1 கோடி பார்வைகளுக்கு மேல் கடந்து சாதனைப் படைத்துள்ளது ரஜினிகாந்தின் ‘கபாலி’ முன்னோட்டம். இதன் மூலம் உலக சினிமா விமர்சகர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் ‘கபாலி’ என்ற தமிழ்ப் படம் பற்றிப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு ‘கபாலி’ பட முன்னோட்டம் வெளியிட்டார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. வெளியான சில நிமிடங்களில் ஒரு மில்லியனைத் தாண்டியது. 22 மணி நேரத்துக்குள் 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

கபாலி முன்னோட்டம் வெளியான நான்காவது நாள் இன்று. மூன்று நாட்கள் முடிவதற்கு முன்பே 10 மில்லியன் அதாவது 1 கோடி பார்வைகளைத் தாண்டி சாதனைப் படைத்துள்ளது கபாலி முன்னோட்டம்.

#TamilSchoolmychoice

இந்திய சினிமாவில் வேறு எந்த நடிகரின் முன்னோட்டப் படமும் இத்தனை வேகமாக ஒரு கோடி பார்வைகளைப் பெற்றதில்லை. ஷாரூக்கான், சல்மான் கான், ஆமிர்கான் போன்றவர்களின் முன்னோட்டங்கள், மிக மிகப் பின்தங்கியே உள்ளன.

இப்போது ஒரு கோடியே ஒரு லட்சம் பார்வைகள் மற்றும் 3.11 இலட்சம் லைக்குகள் பெற்றுள்ளது கபாலி. இந்தச் சாதனையை அத்தனை சுலபத்தில் முறியடிக்க முடியாது. பல வெளிநாட்டு ஊடகங்கள் கபாலி தமிழ் முன்னோட்டத்தை பார்த்து, இது வியக்க வைக்கும் சாதனை என்று செய்தி வெளியிட்டன.