மின்னல் பண்பலை வானொலி இரசிகர்களின் அபரிதமான வரவேற்பைப் பெற்ற இந்த வானொலி நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (6 மே 2016) மாலை 7.30 மணிக்கு முனைவர் காதர் இப்ராகிம் வழங்கும் “மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற தலைப்பிலான இலவச உரை நிகழ்ச்சி ஒன்றை மின்னல் எஃப்.எம் வானொலி, ஆர்டிஎம்மின் அங்காசாபுரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியம் பெர்டானா மண்டபத்தில் தனது இரசிகர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது.
காதர் இப்ராகிம் வழங்கும் தன்முனைப்பு கருத்துகளை செவிமெடுக்க பொதுமக்களும், மின்னல் வானொலி இரசிகர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென மின்னல் வானொலியினர் கேட்டுக் கொள்கின்றனர்.