“அதிமுக தேர்தல் அறிக்கை ஏழைகளைக் குறிவைத்து வரையப்பட்டது. அதில் கண்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவது சாத்தியமே” என உறுதி கூறிய ஜெயலலிதா “எங்களின் தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள அனைத்து உறுதிமொழிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவேன்” என சவால் விடுத்துள்ளார்.
“மேலும் அதிமுக அறிக்கை குறித்து கருத்துரைத்த கருணாநிதி அந்த அறிக்கை ஓர் ஏமாற்று வேலை என்று கூறியுள்ளார். ஆனால், அவரது மகன் மு.க.ஸ்டாலின் கருத்துரைத்த போதோ, அதிமுக அறிக்கை திமுக அறிக்கையின் நகல் எனக் கூறியுள்ளார். எனவே, அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து தந்தை-மகன் இருவருக்கும் இடையிலேயே குழப்பம் நிலவுகின்றது. முதலில் அந்தக் குழப்பத்தை அவர்கள் தீர்த்துக் கொள்ளட்டும்” என்று கிண்டலுடன் சாடியுள்ளார்.