Home Featured உலகம் ஜூலை 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்!

ஜூலை 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்!

584
0
SHARE
Ad

சிட்னி – எதிர்வரும் ஜூலை 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல் (படம்) நேற்று அறிவித்துள்ளார்.

பின்னடைவுகளைச் சந்தித்து வரும் பொருளாதாரம், பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் ஆஸ்திரேலியாவைத் தேடிவரும் அகதிகள் பிரச்சனை ஆகியவை இந்த தேர்தலில் மையப் பிரச்சாரங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Malcolm Turnbull to become new Australian premierநடப்பு ஆட்சிக்கான தவணைக் காலம் முடிவடைவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே, ஆஸ்திரேலியத் தேர்தல் நடத்தப்படுகின்றது.

#TamilSchoolmychoice

லிபரல் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வரும் ஆஸ்திரேலியாவில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தலைமை ஏற்கும் நான்காவது பிரதமராவார் மால்கம் டர்ன்புல். உட்கட்சித் தேர்தலில் முன்னாள் பிரதமர் டோனி அப்போட்டைத் தோற்கடித்து பிரதமர் பதவியை அடைந்தவர் அவர்.

பல மில்லியன்களுக்கு அதிபதியான டர்ன்புல் ஒரு வழக்கறிஞர் என்பதோடு, பதவிக்கு வருவதற்கு முன்பு தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்திய வணிகருமாவார்.

இதற்கு முன்பு 2013இல் ஆஸ்திரேலியா பொதுத் தேர்தலைச் சந்தித்தது.