Home Featured நாடு அவசர ஊர்திக்கு வழிவிட மறுத்த 91 வாகனங்கள் மீது நடவடிக்கை – ஜேபிஜே அறிவிப்பு!

அவசர ஊர்திக்கு வழிவிட மறுத்த 91 வாகனங்கள் மீது நடவடிக்கை – ஜேபிஜே அறிவிப்பு!

592
0
SHARE
Ad

Ambulanceஜோகூர் பாரு – ஆயர் கெரோ அருகே வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், அவசர ஊர்தியை செல்ல விடாமல், வழிமறித்திருந்த 91 வாகனங்கள் மீது சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) நடவடிக்கை எடுக்கவுள்ளது.

நெடுஞ்சாலையில் அவசர வழியை மறித்து இந்த 91 வாகனங்களும் சென்று கொண்டிருந்ததால், அந்த வழியே செல்ல முயன்ற அவசர ஊர்த்தி முன்னேறிச் செல்ல முடியாது சிக்கியது.

கடந்த மே 22-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் 91 வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

அவற்றில் 7 வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆயர் கெரோ அருகே கிலோமீட்டர் 228-ல் நடந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள வாகனங்கள், சாலைப் போக்குவரத்து சட்டம் 1957, பிரிவு 53-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 ரிங்கிட் அபராதமோ அல்லது 6 மாதங்கள் சிறைத்  தண்டனையோ வழங்கப்படும் என்றும் ஜேபிஜே அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த டத்தோ வி.வள்ளுவன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தால், சாலையில் விபத்திற்குள்ளாகிக் கிடந்த இரு வாகனமோட்டிகளை அடைய அவசர ஊர்திக்கு 1 மணி எடுத்துக் கொண்டதாகவும், அவசர ஊர்தி அங்கு சென்றடைவதற்குள் அந்த இரு மோட்டார் ஓட்டிகளும் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.