Home Featured உலகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை: உறுப்பினர்கள் பலமுறை எழுந்து கரவொலியோடு மரியாதை!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை: உறுப்பினர்கள் பலமுறை எழுந்து கரவொலியோடு மரியாதை!

977
0
SHARE
Ad

வாஷிங்டன் – நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட, அமெரிக்க நாடாளுமன்ற – செனட் சபை உறுப்பினர்கள் பல தருணங்களில் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர்.

Narendra Modi-Ryan-before american parliament speechஅமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன்னால் மோடியை வரவேற்கும் நாடாளுமன்றத் தலைவர் பால் ரயான்…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 5 – வது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாவார். இதுவரை  இரண்டு அவைகளும் இணைந்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ள தலைவர்களின் வரிசையில் மோடி 118-வது தலைவராவார்.

#TamilSchoolmychoice

Capitol Hill-America parliament-அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்திருக்கும் கேப்பிட்டல் ஹில்…

மோடிக்கு முன்பாக கடைசியாக இரண்டு அவைகளும் இணைந்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தலைவர் போப்பாண்டவர் ஆவார்.

அவரது உரையை பல இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளும், இணையத் தளங்களும் நேரடியாக ஒளிபரப்பின.

இதற்கிடையில் அமெரிக்க வருகையை முடித்துக் கொண்ட மோடி, தனது வருகையின் அடுத்த கட்டமாக மெக்சிகோ நாட்டுக்கு சென்று சேர்ந்துள்ளார்.

அடுத்து: மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்!