Home Featured கலையுலகம் ரவுண்டபோட் ரவிய தெரியுமா உங்களுக்கு?

ரவுண்டபோட் ரவிய தெரியுமா உங்களுக்கு?

755
0
SHARE
Ad

K.K.Kanaகோலாலம்பூர் – ரவுண்டபோட் ரவியத் தெரியுமா உங்களுக்கு?-  ‘மயங்காதே’ திரைப்படம் பார்த்தவர்களுக்கு ‘ரவுண்டபோட்’ ரவியை நன்கு தெரியும்.

கதாநாயகன் சிகே-வுக்கு இணையாக படம் முழுவதும், ‘ரவுண்டபோட்’ ரவியாக வலம் வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் நடிகர் கே.கே.கண்ணா.

ஒரு மஞ்சள் நிற யமகா பைக்கில், ஒரு வித்தியாசமான பின்னணி இசை ஒலிக்க படத்தில் அவரது அறிமுகக் காட்சியே திரையரங்கை அதிர வைக்கிறது.

#TamilSchoolmychoice

Mayangatheஅது மட்டுமின்றி தனது இயல்பான நடிப்பாலும், உடல்மொழிகளாலும், தனக்கே உரிய பாணியிலான வசன உச்சரிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

ஹேவோக் பிரதர்சுடனான அவரது அறிமுகக் காட்சி தொடங்கி படத்தின் கிளைமாக்சில் சிகே கையைப் பிடிப்பது வரைக்கும் எதார்த்தமான நகைச்சுவைக் காட்சிகளால் மக்கள் மனதில் இடம்பிடிக்கின்றார்.

அதேவேளையில், சித்தப்பா கதாப்பாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் சாமின் இருப்பு படத்திற்கு பக்க பலம் சேர்த்திருக்கிறது.

பேயைத் துரத்த அவர் சொல்லும் அந்த மந்திரமும், அதில் அவரது முகபாவணைகளும் அவ்வளவு சிறப்பு. திரையரங்கில் சிரிப்பொலிகள் அடங்க சில நிமிடங்களாவது ஆகிறது.

கே.கே.கண்ணா, சாம், சுரேஸ், அகிலா கூட்டணியின் நகைச்சுவைக் காட்சியில், அகிலாவிடம் அவர்கள் மூவரும் செய்யும் சேட்டைகள் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவித நெருடலைத் தந்தாலும் கூட, அதை ஆபாசமில்லாமல் மேலோட்டமாக சிகே கையாண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

13427903_1007772942674543_259883340583646337_nமேலும், ஒவ்வொரு நகைச்சுவைக் காட்சிக்குப் பின்னாலும், சிகே, ஆர்த்தியின் தந்தை மகள் பாசம், அந்த நெருடல்களையெல்லாம் நம் மனதில் இருந்து உடனடியாக நீக்கி, பாசப் பிணைப்பில் நெகிழ வைத்துவிடுவது திரைக்கதை அமைப்பின் பலம்.

ஆர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அக்குழந்தையின் நடிப்பில் அவ்வளவு உயிரோட்டம்.

அதற்கு, நிரோஷனின் பின்னணி இசையும் ஒரு காரணமாக அமைகின்றது. காட்சிகளினூடே வரும் சிறிய பாடல்கள், படம் பார்த்து விட்டு வெளியே வந்தாலும் நம் மனதை விட்டு நீங்க மறுக்கின்றது.

தற்போது இரண்டாவது வாரத்தில், அடியெடுத்து வைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மயங்காதே’ திரைப்படத்தை காணத்தவறாதீர்கள்.

-ஃபீனிக்ஸ்தாசன்