Home Featured உலகம் யூரோ: புதன்கிழமை ஆட்டங்கள் – போர்ச்சுகல், இத்தாலி விளையாடுகின்றன!

யூரோ: புதன்கிழமை ஆட்டங்கள் – போர்ச்சுகல், இத்தாலி விளையாடுகின்றன!

582
0
SHARE
Ad

EURO 2016-LOGO-FRANCEபாரிஸ் – ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ‘எஃப்’ பிரிவில் இரண்டு ஆட்டங்களும், ‘இ’ பிரிவில் இரண்டு ஆட்டங்களும் நடைபெறுகின்றன.

மலேசிய நேரப்படி

எஃப்’ பிரிவு

ஐஸ்லாந்து – ஆஸ்திரியா (இரவு 11.55 மணி)

ஹங்கேரி – போர்ச்சுகல் (இரவு 11.55 மணி) 

#TamilSchoolmychoice

இ’ பிரிவு

இத்தாலி – அயர்லாந்து ( வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணி)

சுவீடன் – பெல்ஜியம் (வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணி)

euro-june 22- matches

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் நாட்டின் உள்நாட்டு நேரமாகும்.

இதுவரையில் 12 நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை இரண்டாவது சுற்றுக்கான ஆட்டங்கள் தொடங்குகின்றன. இந்த ஆட்டங்கள் ‘நோக் அவுட்’ – முறையில், அதாவது கண்டிப்பாக ஒருவர் தோற்று வெளியேற வேண்டும் என்ற அடிப்படையில் விளையாடப்படும். இன்றும் நாளையும் விளையாடப்படும் எஞ்சிய ஆட்டங்களின் மூலம், மேலும் 4 குழுக்கள் இரண்டாவது சுற்றுக்குத் தேர்வு பெறும்.

கீழ்க்காணும் நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும் 16 நாடுகளின் பட்டியலில் இடம் பெறுகின்றன:

  1. பிரான்ஸ்
  2. சுவிட்சர்லாந்து
  3. வேல்ஸ்
  4. இங்கிலாந்து
  5. சுலோவாக்கியா
  6. ஜெர்மனி
  7. போலந்து
  8. வட அயர்லாந்து
  9. குரோஷியா
  10. ஸ்பெயின்
  11. இத்தாலி,
  12. ஹங்கேரி