Home Featured நாடு சிலை உடைப்பு : காவல் துறை துரித நடவடிக்கை வேண்டும் – சுப்ரா வலியுறுத்து!

சிலை உடைப்பு : காவல் துறை துரித நடவடிக்கை வேண்டும் – சுப்ரா வலியுறுத்து!

722
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சமீப காலமாக பினாங்கு மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆலயங்களில் சிலைகள் உடைப்பு விவகாரம் விசுவரூபம் எடுத்து வருவதைத் தொடர்ந்து, இதனைத் ம.இ.கா கடுமையாக கண்டிக்கிறது என்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

Dr-S-Subramaniamஅண்மையில் முனீஸ்வரர் ஆலயத்திலும், அதற்கு முன்பு இன்னும் மூன்று ஆலயங்களிலும் நடந்த சிலைகள் உடைப்பு சம்பவங்கள் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு மருட்டலாக இருப்பதால் காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரா நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.

“மேலும், இச்சம்பவங்களையொட்டி போலீஸ் புகார்களும் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் காவல் துறையினர் அவர்களது விசாரணையைத் துரிதப்படுத்துவதோடு குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் நிகழாமல் இருக்க இந்து ஆலயங்களுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டுமென்று காவல் துறையினரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதன் மூலமாக நாட்டிலுள்ள மற்ற மற்ற ஆலயங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்றும், இந்து ஆலயங்கள் இந்திய சமுதாயத்தின் உணர்வு சார்ந்த ஓர் அம்சமாக இருப்பதால், நாட்டிலுள்ள ஆலயங்கள் எந்தவொரு நெருக்கடிகளுமின்றி பாதுகாக்கப்படுவதைக் காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா கேட்டுக்கொண்டார்.

தெய்வீகன் தலைமையில் தனிப்படை அமைப்பு

Thaiveegan A-Datuk-Policeஇதற்கிடையில் பினாங்கு காவல் துறையின் துணைத் தலைவர் டத்தோ ஏ.தெய்வீகன் (படம்) தலைமையில், சிலை உடைப்பு சம்பவங்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அறிவித்துள்ளார்.