Home Featured நாடு அபு சயாப்புக்கு எதிராக இராணுவ நடவடிக்கை – தயாராகிறது இந்தோனிசியா!

அபு சயாப்புக்கு எதிராக இராணுவ நடவடிக்கை – தயாராகிறது இந்தோனிசியா!

548
0
SHARE
Ad

Abu sayyafஜகார்த்தா – பிலிப்பைன்ஸ் அபு சயாப் தீவிரவாத இயக்கத்தினரின் அட்டூழியத்தைப் பொறுத்துப் பார்த்த இந்தோனிசியா கொதித்து எழுந்து, தனது இராணுவப் படைகள் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

கடத்தி வைக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டு மாலுமிகளை மீட்க இந்த முறை இராணுவ நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

அதோடு, இந்த இராணுவ நடவடிக்கையை எப்படி மேற்கொள்ளப்போகிறோம் என்ற திட்டத்தை மணிலாவுடன் கலந்தாலோசித்து, முறையாக ஒரு ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே, அதற்கான செயல்பாடுகளிலும் இறங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், இந்த நடவடிக்கையில், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவுடன் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்து, அபு சயாப்பின் பிடியில் இருக்கும் பிணைக்கைதிகளை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் டிஎன்ஐ கமாண்டர் ஜென் காடோட் நூர்மண்ட்யோ தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட மூன்று இந்தோனிசிய மாலுமிகள் உட்பட, இந்த ஆண்டில் மட்டும் அது போல் நான்கு சம்பவங்களால் இந்தோனிசியப் பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.