Home Featured நாடு ஐஎஸ் நாளிதழைப் படிப்பவர்களுக்கு சாஹிட் எச்சரிக்கை!

ஐஎஸ் நாளிதழைப் படிப்பவர்களுக்கு சாஹிட் எச்சரிக்கை!

630
0
SHARE
Ad

zahidபாகான் டத்தோ – ஐஎஸ் பதிப்பகத்தின் மூலமாக வெளிவருவதாக நம்பப்படும் மலாய் மொழி நாளிதழை தங்களின் சிறப்புப் பிரிவு தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

இணையத்தில் அவரும் அந்நாளிதழைப் படிப்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அது போன்ற தகவல்களைப் படிப்பவர்கள் அல்லது அச்சிடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நமது சட்டமும், விதிமுறைகளும் பயன்படுத்தப்படும்”

#TamilSchoolmychoice

“அது போன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல்துறையிலும் சிறப்புப் பிரிவு உள்ளது. அதோடு உள்ளேயும், வெளியேயும் அதற்கென்று சில தகவல் தொடர்பு குழு உண்டு” என்று சாஹிட் ஹமீடி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.