Home Featured நாடு டத்தோ ஹென்ரி ஏற்பாட்டில் பினாங்கில் டான்ஸ்ரீ நிஜாரின் நூல் வெளியீடு

டத்தோ ஹென்ரி ஏற்பாட்டில் பினாங்கில் டான்ஸ்ரீ நிஜாரின் நூல் வெளியீடு

714
0
SHARE
Ad

Nijhar-Bullock Cart boy-coverஜோர்ஜ் டவுன் – மஇகாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும் பொருளாதாரம், அரசியல், வணிகம், வங்கித் தொழில், பல்கலைக் கழகப் பணிகள், எனப் பன்முகத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கியவருமான டான்ஸ்ரீ டத்தோ கே.எஸ்.நிஜார், தனது சுய வரலாற்றை “மாட்டு வண்டிப் பையன்” (The Bullock Cart Boy) என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.

அவருடைய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களை அவர் கூற, அவரது மகள் டத்தின் பிரமிதா நிஜார் தொகுத்து எழுதியுள்ள இந்த ஆங்கில நூல் அண்மையில் கோலாலம்பூரில் வெளியீடு கண்டது.

Henry Penang 300 x200இதனைத் தொடர்ந்து இந்த நூலின் இரண்டாவது வெளியீடு பினாங்கு பிரமுகர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் (படம்) ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை ஜூலை 16ஆம் தேதி, பினாங்கு இ & ஓ தங்கும் விடுதியிலுள்ள மெகாலிஸ்டர் அரங்கத்தில் (Macalister Ball Room, E & O Hotel) மாலை 4.00 மணிக்கு நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

மலேசியாவின் முன்னணி பதிப்பகமும், நூல் விற்பனை நிலையமுமான எம்பிஎச் (MPH) இந்த நூலை வெளியிட்டுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவின் போது, நிஜாரின் நூலின் பின்னணியையும், அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களையும் அவரே நேரடியாக விவரிக்கும் 22 நிமிட காணொளி திரையிடப்படும்.

சாதாரண பின்புலத்தில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் ஒரு மாட்டு வண்டியில் பிறந்த நிஜார் அதன் காரணமாக, தனது தாயாரும், தனது குடும்பத்தினரும் தன்னை சிறுவயது முதல் ‘மாட்டு வண்டிப் பையன்’ என்றே அழைத்தனர் என்றும் அதன் காரணமாகவே, தனது சுயசரிதைக்கு அந்தப் பெயரையே சூட்டியதாகவும் இந்த நூல் குறித்து நிஜார் தெரிவித்துள்ளார்.

nijhar-bk release-mic leaders-henryகோலாலம்பூரில் நிஜாரின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மஇகா தலைவர்கள் பிரமுகர்கள்…

மஇகாவுக்கும், இந்திய சமுதாயத்திற்கும் பல்வேறு திட்டங்கள், பொருளாதார ஆலோசனைகள் மூலம் தனது பங்களிப்பை வழங்கியுள்ள நிஜார் அது குறித்தும் தனது நூலில் விரிவாக விவரித்துள்ளார்.

இந்த நூல் வெளியீட்டுக்கு பினாங்கு மாநிலத்திலுள்ள பிரமுகர்கள், நிஜாரின் பினாங்கு மற்றும் வடமாநில நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிஜார் பினாங்கு செயிண்ட் சேவியர் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.