அவருடைய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களை அவர் கூற, அவரது மகள் டத்தின் பிரமிதா நிஜார் தொகுத்து எழுதியுள்ள இந்த ஆங்கில நூல் அண்மையில் கோலாலம்பூரில் வெளியீடு கண்டது.
மலேசியாவின் முன்னணி பதிப்பகமும், நூல் விற்பனை நிலையமுமான எம்பிஎச் (MPH) இந்த நூலை வெளியிட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவின் போது, நிஜாரின் நூலின் பின்னணியையும், அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களையும் அவரே நேரடியாக விவரிக்கும் 22 நிமிட காணொளி திரையிடப்படும்.
சாதாரண பின்புலத்தில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் ஒரு மாட்டு வண்டியில் பிறந்த நிஜார் அதன் காரணமாக, தனது தாயாரும், தனது குடும்பத்தினரும் தன்னை சிறுவயது முதல் ‘மாட்டு வண்டிப் பையன்’ என்றே அழைத்தனர் என்றும் அதன் காரணமாகவே, தனது சுயசரிதைக்கு அந்தப் பெயரையே சூட்டியதாகவும் இந்த நூல் குறித்து நிஜார் தெரிவித்துள்ளார்.
மஇகாவுக்கும், இந்திய சமுதாயத்திற்கும் பல்வேறு திட்டங்கள், பொருளாதார ஆலோசனைகள் மூலம் தனது பங்களிப்பை வழங்கியுள்ள நிஜார் அது குறித்தும் தனது நூலில் விரிவாக விவரித்துள்ளார்.
இந்த நூல் வெளியீட்டுக்கு பினாங்கு மாநிலத்திலுள்ள பிரமுகர்கள், நிஜாரின் பினாங்கு மற்றும் வடமாநில நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிஜார் பினாங்கு செயிண்ட் சேவியர் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.