Home Featured கலையுலகம் உதட்டு முத்தத்தால் வந்த பிரச்சினை – கவலையில் காஜல்!

உதட்டு முத்தத்தால் வந்த பிரச்சினை – கவலையில் காஜல்!

761
0
SHARE
Ad

kajal-angryசென்னை – பாலிவுட் படம் ஒன்றில் ரந்தீப் ஹூடாவுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து நடித்திருந்த காஜல் அகர்வாலின் புகைப்படம் கடந்த மாதம் வெளியாகி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்காட்சி தணிக்கையால் வெட்டப்பட்டு விட்டாலும் கூட, அப்பட நிறுவனம் அந்த காட்சியை வைத்தே பெரும் விளம்பரம் தேடியது.

இந்நிலையில், அந்தக் காட்சியால் காஜலுக்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மிகவும் கவலையில் இருக்கிறார் என்கிறது அவருக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.

#TamilSchoolmychoice

காரணம், அக்காட்சியைப் பார்த்த பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், காஜலை புக் செய்ய வரும் போது தங்கள் படத்திலும் அது போல் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம்.

ஆனால், காஜலோ அந்தப் படத்தில் அது போன்ற ஒரு காட்சி தேவைப்பட்டதால் நடித்தேன். இனி அது போல் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து வருகிறாராம்.