Home Featured தமிழ் நாடு ‘மதிமுகம்’ – புதிய தொலைக்காட்சி தொடக்கம்!

‘மதிமுகம்’ – புதிய தொலைக்காட்சி தொடக்கம்!

1043
0
SHARE
Ad

vaikoசென்னை – திமுக-விற்கு ஒரு கலைஞர் தொலைக்காட்சி, அதிமுக-விற்கு ஒரு ஜெயா தொலைக்காட்சி, தேமுதிக-விற்கு ஒரு கேப்டன் தொலைக்காட்சி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மக்கள் தொலைக்காட்சி, காங்கிரசுக்கு ஒரு வசந்த் தொலைக்காட்சி என தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக தொலைக்காட்சிகள் இருந்து வரும் நிலையில், மதிமுக-விற்கும் ஒரு தொலைக்காட்சி வரவுள்ளது.

மதிமுகம் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொலைக்காட்சியை மதிமுக பொதுச்செயலாளர் நாளை ஜூலை 14-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கவுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

செய்திகளோடு, விவாதங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.