சென்னை – எதிர்வரும் வெள்ளிக்கிழமை கபாலி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென புதிய வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்து வெளியான முந்தைய படமான லிங்கா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யாமல், கபாலி படத்தை வெளியிடக் கூடாது என சிலர் வழக்கு தொடுத்துள்ளதைத் தொடர்ந்து, கபாலி தயாரிப்பாளர் தாணு, ரஜினிகாந்த் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் முன்அறிவிப்பு (நோட்டீஸ்) விடுத்துள்ளது.
நாளை வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெறவிருக்கின்றது.
எனவே, கபாலி படம் திட்டமிட்டபடி வெளியிடப்படுமா என்பது நாளைய நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்துத்தான் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.