Home Featured இந்தியா “விலைமாதுவை விட மோசமானவர் மாயாவதி” – பா.ஜ தலைவரின் சர்ச்சைப் பேச்சு!

“விலைமாதுவை விட மோசமானவர் மாயாவதி” – பா.ஜ தலைவரின் சர்ச்சைப் பேச்சு!

1222
0
SHARE
Ad

mayawat-1புதுடெல்லி – உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியை, விலைமாதுவை விட மோசமானவர் என வர்ணித்து, சர்ச்சையில் சிக்கியுள்ளார் அதே மாநிலத்தைச் சேர்ந்த பாஜக, துணை தலைவர் தயாசங்கர் சிங்.

“கட்சி சீட்டை விலைக்கு விற்கிறார்(மாயாவதி) . காலையில் ஒருவர் 1 கோடி ரூபாய் கொடுத்தால் அவருக்குக் கொடுப்பார்.  சில மணி நேரங்கள் கழித்து ஒருவர் 2 கோடி ரூபாய் கொடுத்தால் அவருக்குக் கொடுத்துவிடுவார். அதையே மாலையில் ஒருவர் 3 கோடி ரூபாய் கொடுத்தால் அவருக்குக் கொடுத்துவிடுவார்.” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தயாசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாயாவதி செய்வதெல்லாம் விலைமாதுவின் செயலைப் போல் உள்ளதாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார் தயாசங்கர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தனது சர்ச்சைப் பேச்சிற்கு அவர் மன்னிப்புக் கோரியுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.