Home இந்தியா உத்தர பிரதேசத்தில் மாயாவதி தனித்து போட்டி, அகிலேஷ் உடனான கூட்டணி முறிவு

உத்தர பிரதேசத்தில் மாயாவதி தனித்து போட்டி, அகிலேஷ் உடனான கூட்டணி முறிவு

738
0
SHARE
Ad

புது டில்லி: விரைவில் நடைபெறவுள்ள 11 தொகுதிகளுக்கான உத்தர பிரதேச சட்டமன்ற இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். 

2019-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டணி வைத்திருந்தனர். கூட்டாக தேர்தலை சந்தித்த அவர்களால், உத்தர பிரதேசத்தில் எதிர்பார்த்த அளவுக்குப் பெரும் வெற்றியைப் பெற முடியவில்லை. இதனால், இருவரது அரசியல் கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. 

இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி இந்த முடிவினை அறிவித்துள்ளார்.அரசியல் நிதர்சனங்களைப் புரிந்து கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இது நிரந்தர கூட்டணி முறிவு அறிவிப்பு கிடையாது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்எனவும் குறிப்பிட்டுள்ளார். 

#TamilSchoolmychoice

“நாடாளுமன்றத் தேர்தலின் போது உத்தர பிரதேசத்தில் எங்கள் கூட்டணியின் மிகவும் வலிமையான வேட்பாளர் கூட தோல்வியைத் தழுவினார். நிறைய விஷயங்கள் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளதுஎன்று வெளிப்படையாக மாயாவதி கூறினார்