Home நாடு ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவர், லத்தீஃபா கோயா!

ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவர், லத்தீஃபா கோயா!

893
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வழக்கறிஞரும் லோயார்ஸ் அப் லிபர்டி அமைப்பின் நிருவாக இயக்குனருமான லத்தீஃபா கோயா கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் வாயிலாக இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

முன்னாள் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவரான முகமட் சுக்ரி அப்துல் தனது சேவையை முன்கூட்டியே முடித்துக் கொள்வதாகக் கூறியதன் பேரில் இந்த நியமனம் செயல்படுத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற 2020-ஆம் மே 17-ஆம் தேதி சுக்ரியின் சேவைக் காலம் முடிவடைய இருந்தது.

இந்த நியமனமானது அரசு நிறுவனங்களை சீர்திருத்தும் செயல்முறைக்கு ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லத்தீபா இரண்டு வருட தவணைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.