Home கலை உலகம் “தமிழ் மொழி பழமையான செம்மொழி, இந்தி பேசுபவர்கள் தமிழை கற்க வேண்டும்!”- பாலிவுட் நடிகர்

“தமிழ் மொழி பழமையான செம்மொழி, இந்தி பேசுபவர்கள் தமிழை கற்க வேண்டும்!”- பாலிவுட் நடிகர்

1089
0
SHARE
Ad

புது டில்லி: இந்திய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தது.

இதனையடுத்து, ஆங்கிலம் மற்றும் தமிழுடன் மூன்றாவதாக இந்தி அல்லது வேறொரு மொழியை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என வரைவு திட்டத்தில் பரிந்துரை மாற்றியமைக்கப்பட்டது

எனினும், இதற்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான ஆயுஷ்மான் குரானா, கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவின் மொழிகள் குறித்து தான் எழுதிய கட்டுரையை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

#TamilSchoolmychoice

“நாட்டின் வளர்ச்சி, ஒற்றுமை ஆகியவை கலாச்சாரத்தை ஒன்றிணைப்பதாலும், புதிய மொழிக் கொள்கையை உருவாக்குவதாலும் ஏற்பட்டு விடாது. இந்தியாவை அதனுடைய பன்முகத்தன்மையுடன் இருக்க விடுவது மட்டுமே அதற்கான வலிமை. ஒரே நாடாக நாம் இணைந்திருக்க வேண்டுமானால் நீக்குப் போக்குடன் செயல்படுவது அவசியமாகும்” என ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் என்பதை முதன்மையாக பார்த்தால், தென்னிந்தியா மற்றும் வடக்கிழக்கு இந்தியாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தைதான் காக்க வேண்டும். அங்கு இந்தி மொழி, அந்திய மொழியாக பார்க்கப்படுகிறது. நாட்டை வளப்படுத்தவும், மேம்படுத்தவும் மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு சம்பந்தமில்லாத இடத்தில் புதிய கலாச்சாரத்தை திணிப்பதாக இருக்கக்கூடாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

“இந்தியாவின் சுத்தமான மொழி என்றால் திராவிட மொழிகள்தான். அவை நூறு விழுக்காடு இந்திய மொழிகள். தமிழ்தான் உலகிலேயே மிகவும் பழமையான செம்மொழி. எனவே இந்தி குறித்து பெருமை அடித்துக் கொள்வோர் தமிழைத்தான் கற்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.