Home இந்தியா மாயாவதி- அகிலேஷ் கூட்டணி கலைந்தது!

மாயாவதி- அகிலேஷ் கூட்டணி கலைந்தது!

947
0
SHARE
Ad

புது டில்லி: அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியை அதிகாரபூர்வமாக முடித்துக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள மாயாவதி, “இனி வரும் அனைத்துத் தேர்தல்களும், நாம் தனியாகவே போட்டியிடுவோம்என்று கூறியுள்ளார். 

மூன்று வாரங்களுக்கு முன்னதாக அகிலேஷ் உடனான கூட்டணி தொடர வாய்ப்புள்ளது என்று மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு இறுதியில் உத்தர பிரதேச மாநிலத்தின் பல சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தொகுதிகளில் இருக்கும் தலித்துகளின் வாக்குகளை பெறவே மாயாவதி இந்த முடிவினை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது

#TamilSchoolmychoice

உத்தர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 80 தொகுதிகளில் 15 தொகுதிகளை மட்டுமே இரு கட்சிகளின் கூட்டணி கைப்பற்றின. பாஜக மொத்தமாக 62 இடங்களைப் பிடித்தது.

தேர்தல் தோல்விக்கு சமாஜ்வாடி கட்சிதான் காரணம் என்றும் அவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் தங்களின் வேட்பாளர்களுக்கு விழவில்லை என்று மாயாவதி குற்றம் சாட்டினார்.