ரஜினிகாந்த் நடித்து வெளியான முந்தைய படமான லிங்கா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யாமல், கபாலி படத்தை வெளியிடக் கூடாது என சிலர் வழக்கு தொடுத்துள்ளதைத் தொடர்ந்து, கபாலி தயாரிப்பாளர் தாணு, ரஜினிகாந்த் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் முன்அறிவிப்பு (நோட்டீஸ்) விடுத்துள்ளது.
நாளை வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெறவிருக்கின்றது.
எனவே, கபாலி படம் திட்டமிட்டபடி வெளியிடப்படுமா என்பது நாளைய நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்துத்தான் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments