கோலாலம்பூர் – 1எம்டிபி நிதி குறித்த அமெரிக்க நீதித்துறையின் வழக்கில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெயரோ அல்லது அவர் குற்றம் புரிந்ததற்கான குற்றச்சாட்டுகளோ இல்லை என தலைமை வழக்கறிஞர் மொகமட் அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சிவில் வழக்கில் பிரதமருக்கு எதிராக குற்றம் புரிந்ததாகக் குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் எழுவதை நினைத்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் கவலை கொள்கிறது”
“அமெரிக்க நீதித்துறை (Department of Justice) பதிவு செய்துள்ள சிவில் வழக்கில் பிரதமரின் பெயரோ அல்லது குற்றம் புரிந்ததாகக் குற்றச்சாட்டுகளோ எங்குமே இடம்பெறவில்லை என்பதை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெளிவுபடுத்துகின்றது” என்று தெரிவித்துள்ளார்.