கடந்த 2015-ம் ஆண்டு, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரியூ சான் உட்பட 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி அனைத்துலக அளவில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தோனிசியா, இந்த ஆண்டும் அதே போன்றதொரு தண்டனையை நிறைவேற்றவுள்ளது.
தற்போது தண்டனை நிறைவேற்றப்படவுள்ள 16 பேரில், இந்தோனிசியர்களோடு, நைஜீரியா, ஜிம்பாவே, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் உள்ளனர்.
Comments