சிட்னி – ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான வாடிகன் பொருளாளர் கார்டினல் ஜார்ஜ் பெல், தனது பிறந்த நாட்டில் இருந்த போது, சிறார்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விக்டோரியா காவல்துறைத் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை மெல்பெர்ன் வானொலி ஒன்றில் பேசிய விக்டோரியா மாகாண காவல்துறை ஆணையர் கிரஹாம் அஸ்டோன், இந்த விவகாரம் தொடர்பாக பெல்லை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து 1990-ம் ஆண்டு வரையில், அவர் சிறார்களிடத்தில் வன்புணர்வு கொண்டதாக, அவருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அஸ்டோன் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த வானொலி நிகழ்ச்சியில் கூறப்பட்ட அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் பெல் மறுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.