கோலாலம்பூர் – முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் புதிதாக விண்ணப்பித்துள்ள ‘பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா – Parti Pribumi Bersatu Malaysia’ என்ற கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டாமென அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சங்கப்பதிவிலாகாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
‘பெர்சாத்து’ என்ற சொல் மிகவும் பொதுவானது என்றும், அதை மக்களைக் குழப்பக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அவர் புதிய கட்சியைத் துவங்கட்டும். அது சரி தான். ஆனால் அவர் ‘பெர்சாத்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. அது ஒரு பொதுவான சொல்”
“சங்கப்பதிவிலாகாவை நான் வலியுறுத்துகின்றேன். அவர்கள் அக்கட்சிக்கு அனுமதி வழங்குவதாக இருந்தாலும் செய்யட்டும். ஆனால் பெர்சாத்து என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாமெனச் சொல்லுலுங்கள்” என்று தெங்கு அட்னான் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.