Home Featured கலையுலகம் விருது விழாவில் 9 பிரிவுகளில் ‘ஜகாட்’ போட்டி!

விருது விழாவில் 9 பிரிவுகளில் ‘ஜகாட்’ போட்டி!

921
0
SHARE
Ad

Jagat

கோலாலம்பூர் – செப்டம்பரில் நடைபெறவுள்ள 28-வது மலேசியத் திரைப்பட விருது விழாவில், நிலவி வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், ‘ஜகாட்’ திரைப்படம் அதில் 9 பிரிவுகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘ஜகாட்’ திரைப்படக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த மாற்றம் நடைபெறக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இப்படி ஒரு துணிச்சலான வரலாற்றுப் பூர்வ முடிவை எடுக்க கலைத்துறையில் உள்ளவர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்த ஃபினாஸ், பிஎப்எம், கேகேஎம்எம் மற்றும் டத்தோ சாலே சையட் கெருவாக் ஆகியோருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

திரைப்பட விழாவில் (FFM 28) ஜகாட் 9 பிரிவுகளில் போட்டியிடுகின்றது. அவை:-

1.சிறந்த படம் 2. சிறந்த இயக்குநர் 3. சிறந்த திரைக்கதை 4. சிறந்த புதிய இயக்குநர் 5. சிறந்த உண்மைக் கதை 6. சிறந்த குழந்தை நட்சத்திரம் 7. சிறந்த கலை இயக்குநர் 8. சிறந்த ஒளிப்பதிவாளர் 9. சிறந்த படத்தொகுப்பு ஆகிய 9 பிரிவுகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.