Home Video ஜகாட் இயக்குநர் சஞ்சய் பெருமாளின் ‘நீர்மேல் நெருப்பு’ மலேசியத் தமிழ்ப் படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்குத்...

ஜகாட் இயக்குநர் சஞ்சய் பெருமாளின் ‘நீர்மேல் நெருப்பு’ மலேசியத் தமிழ்ப் படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்குத் தேர்வு

1048
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 2016-ஆம் ஆண்டில் சிறந்த மலேசியத் திரைப்படமாக, மற்ற மலாய்மொழிப் படங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்ப் படம் ‘ஜகாட்’. சஞ்சய் குமார் பெருமாள் இயக்கியிருந்த இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த புதுமுக இயக்குநர் விருதும் கிடைத்தது.

பாராட்டுகளைக் குவித்த ஜகாட் படம் வெளியிடப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சஞ்சய் பெருமாள் இயக்கி வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படமான ‘நீர்மேல் நெருப்பு’ நெதர்லாந்தின் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்று ரோட்டர்டாம் திரைப்பட விழாவாகும். தமிழ் நாட்டிலிருந்து இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான விடுதலை 1 – விடுதலை 2 – திரைப்படங்களும் இயக்குநர் ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படமும் இந்த ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியிருக்கின்றன. ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி நடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மலேசியத் தமிழ்ப் படம் ஒன்றும் இந்த திரைப்பட விழாவுக்கு தேர்வாகியிருப்பது நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும்.

நீர்மேல் நெருப்பு திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: