கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி, இரவு 7.20 மணியளவில், ஜிஞ்சாங் உத்தாரா லாங்ஹவுசிலுள்ள மசூதி அருகே அவர் கடைசியாகக் காணப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பாத காரணத்தால், அவரது தந்தை நூர்ஷாம் ஜாலில் (வயது 63) காவல்துறையில் புகார் அளித்தார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, நூர் அமிலாவின் 25 வயதான உறவினர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அந்த உறவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், நூர் அமிலாவின் சடலம் மிகவும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments