Home Featured நாடு காணாமல் போன 5 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

காணாமல் போன 5 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

451
0
SHARE
Ad

WhatsApp Image 20160812 at 173602 (1)கோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி, காணாமல் போன 5 வயது சிறுவன் நூர் அமிலா எட்ருஸ் நோர்ஷாமின் சடலம் உலு கிலாங், கம்போங் கெமென்சா அருகேயுள்ள பள்ளம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி, இரவு 7.20 மணியளவில், ஜிஞ்சாங் உத்தாரா லாங்ஹவுசிலுள்ள மசூதி அருகே அவர் கடைசியாகக் காணப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பாத காரணத்தால், அவரது தந்தை நூர்ஷாம் ஜாலில் (வயது 63) காவல்துறையில் புகார் அளித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, நூர் அமிலாவின் 25 வயதான உறவினர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அந்த உறவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், நூர் அமிலாவின் சடலம் மிகவும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.