புதுடில்லி – இன்று புதன்கிழமை மாலை மத்திய மியன்மாரைத் தாக்கிய 6.8 புள்ளி வலுவான நிலநடுக்கத்தால், அண்டை இந்திய மாநிலங்களும் பாதிப்படைந்தன.
மியன்மாரைத் தாக்கிய நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன.
மியன்மாரின் மெய்க்திலா என்ற நகரின் மேற்குப் பகுதியிலிருந்து 143 கிலோமீட்டர் தொலைவில், ஏறத்தாழ 84 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமிட்டு தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார், அசாம் ஆகிய இந்திய மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் இரயில், பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கருதி பல அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.