Home Featured உலகம் ராஜபக்சேவின் ஆலோசகருக்கு மரண தண்டனை!

ராஜபக்சேவின் ஆலோசகருக்கு மரண தண்டனை!

881
0
SHARE
Ad

dumindaகொழும்பு – இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் ஆலோசகராக, இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான டுமின்டா சில்வாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு, பாரத லட்சுமன் பிரேமச்சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, டுமின்ந்தா உட்பட 7 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அவ்விசாரணையின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

அதன் படி, ராஜபட்சேவின் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.