கோலாலம்பூர் – கடந்த 10 ஆண்டுகளாக, ஜோகூர் பாரு செனாய் விமான நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 3 போயிங் 747 இரக விமானங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.
30 வயதான அந்த மூன்று விமானங்களில் இரண்டு கார்கோ வகையைச் சேர்ந்தது என்றும், ஒன்று வர்த்தக வகையைச் சேர்ந்தது என்றும் ஸ்டார் இணையதளம் தெரிவித்துள்ளது.
தற்போது அவை, தலா 5.3 மில்லியன் ரிங்கிட்டிற்கு ஏலத்தில் விடப்படவுள்ளன. இதற்கு முன்பு அந்த விமானங்களின் விலை தலா 120 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனை நிறுத்தி வைக்க கட்டணம் மட்டுமே சுமார் 1 மில்லியன் ரிங்கிட் செலுத்தி வந்தது அதன் உரிமையாளரான அமெரிக்க நிறுவனம்.
இந்நிலையில், அந்நிறுவனத்தை நீதிமன்றத்திற்கு இழுத்த விமான நிலைய நிர்வாகம், அவ்வழக்கில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது விமானங்கள் ஏலத்தில் வரவுள்ளன.
இதனிடையே, அவ்விமானங்கள், வெளிநாட்டுப் பதிவு எண்ணைக் கொண்டிருப்பதால், அதை மலேசியப் பதிவாக மாற்ற சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலாகா தெரிவித்துள்ளது.
படம்: நன்றி (The Star)