Home Featured நாடு கேபில் டையிலிருந்து தப்பிப்பது எப்படி? – எளிய வழிமுறை (காணொளியுடன்)

கேபில் டையிலிருந்து தப்பிப்பது எப்படி? – எளிய வழிமுறை (காணொளியுடன்)

1343
0
SHARE
Ad

cable-tieகோலாலம்பூர் – உலகம் இப்போது போய் கொண்டிருக்கும் சூழலில், ஒவ்வொரு தனிமனிதனும் தற்காப்பு வழிமுறைகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது போன்ற ஒரு நல்ல செயல் எதுவும் இல்லை என்று சொல்லலாம்.

ஆபத்தில் சிக்கிக் கொண்டால், பதற்றமடையாமல் அதிலிருந்து தப்பிக்க நாம் கற்றுக் கொள்ளும் தற்காப்பு வழிமுறைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

அந்த வகையில், இதோ ஒரு ஆபத்து சமயத்தில் உங்கள் கைகள் ‘கேபில் டை – Cable Tie’ -ஆல் கட்டப்பட்டிடிருந்தால் அதிலிருந்து எளிதில் தப்பிக்கும் ஒரு வழிமுறை.

#TamilSchoolmychoice

‘கேபில் டை’ என்பது இன்று எல்லா இடங்களிலும் சர்வ சாதாரணமாக, விலை மலிவாகக் கிடைக்கும் ஒரு பொருள். அதை வைத்துக் கட்டிவிட்டால் வெறும் கையால் அவிழ்ப்பது சற்று சிரமம் தான்.

வழக்கமாக, அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் இயற்கையாகவே கைகளை அகலவாக்கில் வைத்து அவிழ்க்க முயற்சி செய்வோம். அது முற்றிலும் பயனற்றது என்கின்றனர் நிபுணர்கள்.

அதற்குப் பதிலாக, கைகளை மேலே உயர்த்தி அப்படியே, வயிற்றுப் பகுதி வரை வேகமாக கொண்டு வந்தால், அழுத்தத்தில் ‘கேபிள் டை’ விடுபட்டுவிடும் என்று அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இதோ அந்த வழிமுறையை இங்கே காணொளி வழியாகக் காணலாம்:

அது சரி.. கைகள் பின்னே வைத்து கட்டப்பட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழலாம். இதோ அதற்கும் ஒரு வழிமுறை உண்டு இக்காணொளியில்: