Home Featured கலையுலகம் ஜி.வி.பிரகாஷின் அடுத்த அதிரடி “அடங்காதே”

ஜி.வி.பிரகாஷின் அடுத்த அதிரடி “அடங்காதே”

737
0
SHARE
Ad

adangathey-gv-prakash

சென்னை – சாதாரண பக்கத்து வீட்டுக்காரப் பையன் தோற்றத்துடன், படங்களில் நடிக்கத் தொடங்கி அடுத்தடுத்து கதாநாயகனாக, வெற்றிப் படங்களைத் தந்து வரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த அதிரடிப் படைப்பாக வழங்கவிருப்பது ‘அடங்காதே’.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் சரத்குமாருடன் இணைகிறார் ஜி.வி.பிரகாஷ். ‘இவன் வேற மாதிரி’ படத்தின் கதாநாயகி சுரபி இந்தப் படத்திலும் கதாநாயகியாக நடிக்கின்றார்.

#TamilSchoolmychoice

பழிவாங்கும் திரில்லர் கதையாக பரபரப்பாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரகாஷின் அடுத்த படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ – ராஜேஷ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு அடுத்து வெளிவரப்போகும்  ‘அடங்காதே’ படம், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் வெளிவருகின்றது.

சரத்குமாரும் படத்தில் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.