Home Featured தமிழ் நாடு எங்களது பேருந்துகளை எரிப்பதால் காவிரி விவகாரம் தீர்ந்துவிடுமா? – கேபிஎன் அதிபர் கேள்வி!

எங்களது பேருந்துகளை எரிப்பதால் காவிரி விவகாரம் தீர்ந்துவிடுமா? – கேபிஎன் அதிபர் கேள்வி!

750
0
SHARE
Ad

kpnசென்னை – காவிரி விவகாரம் தொடர்பாக, நேற்று திங்கட்கிழமை நயந்தாஹாலியிலுள்ள பேருந்து நிலையத்தில், தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பேருந்துகளில் 50-க்கும் மேற்பட்டவை, பிரபல கேபிஎன் நிறுவனத்தைச் சார்ந்தது என்று கூறப்படுகின்றது.

தமிழகத்தின் சேலம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான கேபி நடராஜனுக்குச் சொந்தமான அப்பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது குறித்து அவர் ‘தி நியூஸ் மினிட்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “முதல் முறையாக எங்களுடைய பேருந்துகள் இவ்வாறு குறிவைக்கப்பட்டுள்ளன. காவிரி பிரச்சினை இரு மாநிலத்திலும் நடைபெறும் என்பதால், சில நேரங்களில் பஸ் மீது தாக்குதல் நடத்தப்படும். ஆனால் இவ்வளவு பெரிய அளவில் நடந்திருப்பது இதுவே முதல் முறை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் ஒரு தொழிலதிபர். என்னுடைய பேருந்துகளையும், வியாபாரத்தையும், குறிவைப்பதால், காவிரி பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? எங்களால் எதுவுமே செய்ய முடியாது” என்றும் கே.பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கேபிஎன் நிறுவனம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றது.