Home இந்தியா கமல்ஹாசன் – குமாரசாமி சந்திப்பு சர்ச்சை

கமல்ஹாசன் – குமாரசாமி சந்திப்பு சர்ச்சை

1290
0
SHARE
Ad

பெங்களூரு – காவிரிப் பிரச்சனையில் புதிய கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று திங்கட்கிழமை (ஜூன் 4) பெங்களூரு வந்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநில அரசுகளும் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என கமல்ஹாசன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

இருப்பினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் கமல் தனியாக சென்று கர்நாடக முதல்வரைச் சந்தித்திருப்பது தமிழகத்தில் கடுமையான கண்டனங்களைத் தோற்றுவித்திருக்கிறது.