Home நாடு தலைமை வழக்கறிஞர் நியமனம்: அன்வார் மாமன்னருடன் சந்திப்பு!

தலைமை வழக்கறிஞர் நியமனம்: அன்வார் மாமன்னருடன் சந்திப்பு!

1195
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (இரவு 10.45 நிலவரம்) அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை (ஜூன் 4) இரவு மாமன்னரைச் சந்திக்க தற்போது கோலாலம்பூரிலுள்ள மாமன்னர் அரண்மனை வந்தடைந்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) மலாய் ஆட்சியாளர்களின் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில் அன்வாரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஏற்கனவே, மற்ற மலாய் ஆட்சியாளர்களைச் சந்தித்து மலாய் இனத்தின் உரிமைகள் புதிய பக்காத்தான் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பறிபோகாது என்ற உறுதி மொழியையும் அன்வார் வழங்கியிருக்கிறார்.
அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக டோமி தோமசை நியமிக்க பிரதமர் துன் மகாதீர் சமர்ப்பித்துள்ள பரிந்துரையை ஏற்பதற்கு மலாய் ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். மலாய்-முஸ்லீம் அல்லாத அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க மலாய் ஆட்சியாளர்கள் தயங்குவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அன்வார் மாமன்னரைச் சந்திக்கிறார்.