Home நாடு “பொதுத் தேர்தலுக்கான பணம்”-நஜிப்பைத் தற்காக்கிறார் ஷாரிர்

“பொதுத் தேர்தலுக்கான பணம்”-நஜிப்பைத் தற்காக்கிறார் ஷாரிர்

1015
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் குறித்து பெல்டாவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட் தற்காத்துப் பேசியுள்ளார்.

பல அம்னோ கிளைகள் மற்றும் தொகுதிகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதால் ரொக்கமாகப் பணத்தை விநியோகிக்க நஜிப்புக்குத் தேவையிருந்தது என ஷாரிர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல் முழுவதுமே ரொக்கப் பணம் தேவைப்படுகிறது என்றும் அந்தப் பணத்தை வங்கிகள் மூலமாகவோ, காசோலைகள் மூலமாகவோ மாற்றுவதும் வழங்குவதும் அதிக காலம் பிடிக்கும் என்பதால் உடனடியாக அந்தப் பணத்தை விநியோகிக்கவே ரொக்கமாக வைக்கப்பட்டிருந்தது எனவும் ஷாரிர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலுக்கு ரொக்கப் பணம் மிகவும் அவசியம் என்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே அந்தப் பணம் ரொக்கமாக வைக்கப்பட்டிருந்தது என்றும் ஷாரிர் மேலும் கூறியிருக்கிறார்.

பெவிலியன் அடுக்குமாடிக் குடியிருப்பில் கைப்பற்றப்பட்ட பணம் அம்னோவின் தேர்தல் நிதி என்றும் ஷாரிர் வாதிட்டார்.