ரியோ டி ஜெனிரோ – பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா, ஈட்டி எறிதல் போட்டியின் எப்46 பிரிவில், 63.97மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார்.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள இரண்டாவது தங்கம் இதுவாகும்.
கடந்த 2004-ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் 62.15 மீட்டர் தூரம் எறிந்து தாம் நிகழ்த்திய சாதனையை, தேவேந்திர ஜஜாரியா தற்போது முறியடித்து மீண்டும் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.