ரியோ டி ஜெனிரோ – மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளான பாராலிம்பிக்சில், ஆண்களுக்கான அதிக தூரம் தாண்டுதல் போட்டியில் அப்துல் லத்தீப் ரொம்லி தங்கப் பதக்கம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மலேசியா இதுவரை மூன்று தங்கங்களை வாரிக் குவித்துள்ளது.
பெர்லிசைச் சேர்ந்த 19 வயதான அப்துல் லத்தீப் 7.6 மீட்டர் தூரத்தைத் தாண்டியதோடு உலக சாதனையையும் புரிந்துள்ளார்.
இந்தப் போட்டியில் மொத்தம் ஆறு முறை போட்டியாளருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அதில் எது அதிக தூரம் தாண்டப்பட்டதோ அந்த சாதனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இதுவரை மற்ற இரண்டு பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் மலேசியா தங்கப் பதக்கம் பெற்றுள்ளது.
இதற்கு முன் பலமுறை பாராலிம்பிக்சில் மலேசியா பங்கு பெற்றிருந்தாலும் எந்தப் போட்டியிலும் இதுவரை தங்கப் பதக்கம் பெற்றதில்லை.
ஆனால், இந்த ஆண்டு 3 போட்டிகளில் தங்கம் பெற்றுள்ளது.